search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிட்டன் மாணவர்"

    சர்க்கரை நோயை குணப்படுத்த வகை செய்யும் மருந்தை கண்டு பிடித்த சிறிய நிறுவனம் ஒன்றை, மருந்து உற்பத்தி உலகின் ஜாம்பவான் நோவோ நோர்டிஸ்க் ஒரே இரவில் விலைக்கு வாங்கியது.
    லண்டன்:

    மனிதர்களுக்கு பொதுவாக இரண்டு விதமான சர்க்கரை நோய் உடலில் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒருவகை, மற்றொன்று ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகக்குறைவாக இருப்பது. உலகம் முழுவதும் 328 மில்லியன் மக்கள் இருவகையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் அந்தோனி டேவிஸ், அவரது மாணவர் ஹாரி டெஸ்டேக்ரோயிக்ஸ் மற்றும் டான் ஸ்மார்ட் என்ற மூவர் ஸிய்லோ (Ziylo) என்ற சிறிய நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் நோய்க்கான மருந்து ஒன்றை கண்டறிந்தனர்.


    மாணவர் ஹாரி

    இதனை அறிந்த, மருந்து உற்பத்தி உலகின் ஜாம்பவான் நிறுவனமான டென்மார்க்கை சேர்ந்த நோவோ நோர்ஸ்டிக், ஸிய்லோ நிறுவனத்தை 623 மில்லியன் பவுண்ட் கொடுத்து விலைக்கு வாங்கியது. இதில், ஸிய்லோ நிறுவனத்தில் 23 சதவிகித பங்குகளை வைத்திருந்த ஹாரிக்கு 143 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய்) கிடைத்துள்ளது. 

    ஆராய்ச்சி படிப்பு மாணவரான ஹாரி இந்த டீலிங்கால் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். 
    ×